பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை தற்போதைய சூழலில் திறக்க வேண்டாமென மாநில பா.ஜ. அரசை அறிவுறுத்தியுள்ளனர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான சித்தராமையா மற்றும் குமாரசாமி.
அவர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; கொரோனா பரவல் இன்னும் தணியாத சூழலில், கர்நாடகாவில் பள்ளிகளைத் திறக்கக்கூடாது. பெற்றோர்களும் பள்ளி திறப்பதற்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், ஒருசிலரின் நிர்ப்பந்தத்திற்காக மாநில அரசு அடிபணியக்கூடாது. பள்ளிகளின் மூலம் கல்லாக்கட்ட நினைப்பவர்கள், மாணாக்கர்களின் உயிரில் விளையாடக்கூடாது.
மாநிலத்தில் இதுவரை 10 வயதுக்கு உட்பட்ட 20,256 மாணாக்கர்களும், 11 முதல் 20 வயதுக்கு உட்பட்ட 47,061 மாணாக்கர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இதுவரை 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தச் சூழலில் பள்ளிகளைத் திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.