கார்த்தி – அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான ‘விருமன்’ படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ’96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ள புதிய படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யப்போவதாக கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.