சென்னை

ரு சில நிறுவனங்கள் தங்கள் லாபத்தை விட அதிக அளவில் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ள்தாக கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்

உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்குத் தடை விதித்தது.  இந்த நன்கொடை பத்திரங்கள் ஸ்டேட் வங்கி மூலம் விற்பனை செய்யப்பட்டதால் இது குறித்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்க ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.  இதற்கு கால அவகாசம் கோரிய ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்ரம் மறுப்பு தெரிவித்தது.

எனவே ஸ்டேட் வங்கி இந்த விவரங்களை அளித்து அதை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் வெளியிடடது.  இந்த விவரங்களின் அடிப்படையில் பல நிறுவனங்கள் பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.  இதையொட்டி பாஜகவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டன தெரிவித்து வருகின்றனர்.

நேற்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் ,

“அரசியல் கடசிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம்  நன்கொடை வழங்கிய நிறுவனங்களைப் பார்க்கும்போது, சொற்ப லாபத்தை பெற்ற சில நிறுவனங்கள், தங்கள் லாபத்தை விட மிக அதிகமான தொகையை பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 

மேலும் இதன் மூலம் மத்திய விசாரணை அமைப்புகளைக் கையில் வைத்துக் கொண்டு, பா.ஜ.க. அரசு தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தேர்தல் பத்திரம் மூலம் வசூல் செய்துள்ளார்கள் என்பது புரிகிறது.” 

என்று தெரிவித்துள்ளார்