மைசூரு:

டிக்டாக் பொழுதுபோக்கு செயலின் விபரீதத்தால், கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர்  கழுத்து முறிந்து உயிருக்கு போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே ஒரு மகனை பறிகொடுத்த பெற்றோர்கள் துக்கம் தாங்காமல் புலம்பி வருகின்றனர்.

பிரபலமான மியூசிக்கல் செயலியான டிக்-டாக் செயலிக்கு வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் அடிமையாகி உள்ளனர்.    குறிப்பாக இளம் வயதினர் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி பல்வேறு சாகங்களை செய்து பதிவேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில்,  கர்நாடகாவை சேர்ந்த  22 வயது யங்பாய் குமார் என்ற இளைஞர்,  பேக் பிலிப் எனப்படும் பின்புறமாக குதித்தலில் ஈடுபட்டு, அதை தனது நண்பர்மீது டிக்டாக் செயலியில் வீடியோ எடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது தலை நேரடியாக தரையில் மோதியதால், அவரது முழுகெழும்பு உடைந்தது.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தத.  அவர் முதுகெலும்பு முழுவதையும் ஸ்கேன் செய்த மருத்துவர் கள் அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மறுத்துவிட்ட நிலையில், 8 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று சிகிசசை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கண்ணீருடன் கூறிய இளைஞரின் பெற்றோர், . ‘இவன் எங்களின் ஒரே மகன். எங்களை விட்டு போய்விட்டான் என்று கூறி கதறி அழுதனர்.