சிட்னி, ஆஸ்திரேலியா

சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பர்சை திருடியதால் விமான இயக்குனர் ரோகித் பாசின் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 22 ஆம் தேதி ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் ஏஐ 301 விமானம் சிட்னி விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு கிளம்ப இருந்தது.  இந்த விமானத்தில் தலைமை அதிகாரி மற்றும் விமான இயக்குனராக பணி புரியும் ரோகித் பாசின் சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு டூடி ஃப்ரீ ஷாப் க்கு சென்றுள்ளார்.

அங்கு ரோகித் பாசின் ஒரு பர்ஸ் ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்துள்ளார்.  ஆனால் கண்காணிப்பு காமிரா மூலம் இது கண்டறியப்பட்டு  உடனடியாக ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த புகாரை விசாரித்த அதிகாரிகள் ரோகித் பாசின் குற்றம் புரிந்தது உண்மை என கண்டறிந்துள்ளனர்.

அதையொட்டி ஏர் இந்தியா நிர்வாகம் ரோகித் பாசின் பணி இடை நீக்கம் செய்யபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  இந்த தகவலை அளித்த ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர்  ரோகித் மீது மேற்கொண்டு விசாரணை தொடர்ந்து வருவதாகவும் ஏர் இந்தியா நிர்வாகம் இது போன்ற முறைகேடுகளை எப்போது பொறுத்துக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.