பெங்களூரு

கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக அளித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக இஸ்லாமிய மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் மாணவ மாணவியர் சீருடையுடன் வர வேண்டும் எனவும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்ட்து.   இதற்கு எதிராக உடுப்பியை சேர்ந்த இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடத்தனர்.  இந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணா தீட்சித் விசாரித்தார்.

அவர் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகளின் அமர்வு விசாரிக்க பரிதுரை செய்ததால் தலைமை நீதிபதி உள்ளிட்ட அமர்வு விசாரணை செய்தது.  நேற்று இந்த வழக்கில் அளிக்கப்பட தீர்ப்ப்பில், “இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நடைமுறை இல்லை.    இது கலாசாரத்தின் அடிப்படையில் அணியப்படுகிறது.  மதமும் கலாச்சாரமும் வேறு வேறானவை

கல்வி நிலையங்களில்; சீருடை அணியச் சொல்வதில் தவறு இல்லை.  இதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.  எனவே கர்நாடக அரசு பிறப்பித்த சீருடை உத்தரவு செல்லும். ஆகவே கல்வி நிலையக்களில் ஹிஹாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்பதால் இஸ்லாமிய மாணவிகள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை இஸ்லாமிய மாணவிகள் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் கர்நாடக இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு கோரி மனு அளித்துள்ளனர்.   விரைவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என இஸ்லாமிய மாணவிகள் தெரிவித்துள்ளனர்.