கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி…

Must read

 

கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. தனது அமைச்சரவையை நேற்று அவர் விரிவுபடுத்தினார்.

ஏழுபேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களில் நான்கு பேர் எம்.எல்.ஏ.க்கள். மூன்று பேர் எம்.எல்.சி.க்கள்.

அமைச்சர் பதவி கிடைத்த பா.ஜ.க..எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சித்ரதுர்கா எம்.எல்.ஏ. திப்பாரெட்டி “நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஆனால் என்ன பலன்? மக்களால் தேர்வு செய்யப்படாதவர்களுக்கு (எம்.எல்.சி.க்கள்) மந்திரி பதவி கிடைத்துள்ளது. 30 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். அமைச்சராக இருந்து மக்கள் சேவையாற்ற நினைத்தேன்… நடக்கவில்லை” என புலம்பி தீர்த்துள்ளார்.

“எடியூரப்பா, தன்னை ‘பிளாக்மெயில்’ செய்தவர்களுக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளர்” என விஜயபுரா எம்.எல்.ஏ. பசவனகவுடா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

“எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் பா.ஜ.க.வை கடத்திச்சென்று வைத்துள்ளனர். எடியூரப்பா குடும்பத்து வாரிசு அரசியலுக்கு பிரதமர் மோடி முடிவு கட்டவேண்டும்” எனறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“பெங்களூரு மற்றும் பெலகாவி மாவட்டங்களை மட்டுமே அரசாங்கம் என்று நினைத்து விட்டார், எடியூரப்பா” என ஹொன்னாலி தொகுதி எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.

“ஐதராபாத் கர்நாடகா மத்திய மற்றும் கடலோர கர்நாடகா மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி

More articles

Latest article