ஸ்ரீதேவி மகளின் படப்பிடிப்பை நிறுத்திய விவசாயிகள்…

Must read

 

நடிகை ஸ்ரீதேவி- போனிகபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர் ‘குட்லக் ஜெர்ரி’ என்ற இந்திப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரபல இயக்குநர் ஆனந்த்ராய் தயாரிக்கும் இந்த படத்தை சித்திக் சென்குப்தா டைரக்டு செய்கிறார்.

இதன் படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஸ்சி பதானா நகரில் நடைபெற்றது.

அங்கு திரளாக குவிந்த விவசாயிகள் படப்பிடிப்பை நிறுத்துமாறு குரல் எழுப்பினர். ஆர்ப்பாட்டமும் செய்துள்ளனர்.

“மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்தி நட்சத்திரங்கள் யாரும் அதனை ஆதரித்து குரல் எழுப்பவில்லையே?” என படப்பிடிப்பு குழுவினரிடம் சண்டை போட்டுள்ளனர்.

“எங்கள் சார்பில் நடிகை ஜான்வி கபூர் விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுவார்” என அவர்களை இயக்குநர் சமாதானம் செய்தார்.

அதன்பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் 3 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ஜான்வி கபூர், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டார்.

– பா. பாரதி

More articles

Latest article