பெங்களூரு:

ர்நாடக மாநில அரசில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் சி.எஸ்.சிவள்ளி. இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில நகராட்சித்துறை  அமைச்சராக தார்வார் மாவட்டம் குந்துகோல் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட  ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சி.எஸ்.சிவள்ளி (வயது 57) இருந்து வந்ததார்.

சிஎஸ் வள்ளிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,   நேற்று மதியம் 1.45 மணியளவில் அவர் உப்பள்ளியில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது,   திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக  உப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்க  அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாநில முதல்வர் குமாரசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.  சி.எஸ்.சிவள்ளியின் உடல் அவரது சொந்த ஊரான குந்துகோலில் அரசு மரியாதையுடன் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு, தார்வார் மாவட்டத்தில் இன்று அரசு விடுமுறையை மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் வழக்கம் போலவே நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசு கூறி இருக்கிறது.