டில்லி

ராணுவ அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்க எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் பாஜக அரசு அவர்கள் புகைப்படங்களை பிரசாரத்துக்கு பயன் படுத்தி வருகிறது.

அரசு அதிகாரிகளின் பணி வகைகள் நான்கு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஐஏஎஸ், ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் மற்றும் சிசிஎஸ் ஆகும். இதில் சிசிஎஸ் எனப்படும் பிரிவில் மேலும் இரு பிரிவுகள் உள்ளன. அவை களப்பணி ஆற்றுபவர் மற்றும் களப்பணி ஆற்றாதவர் என இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறாவது ஊதிய ஆணையம் இந்த சிசிஎஸ் பிரிவினருக்கு பதவி உயர்வுக்கு நிகரான ஒரு சலுகையை அறிவித்தது.

களப்பணி ஆற்றாதோர் மேம்பாடு என பெயரிடப்பட்ட அந்த திட்டத்தின்படி இந்த பிரிவில் உள்ள அதிகாரிகளுடன் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற அதிகாரிகளின் அதே அணி அதிகாரிகளுக்கும் ஊதிய உயர்வு அளிக்குப்பட வேண்டும். அதாவது ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வின் போது மற்ற அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு இல்லை எனினும் ஊதிய உயர்வு கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் செயலர் பதவி வரை உள்ள அதிகாரிகள் வருவார்கள்.

ஆனால் அரசு ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமேமுதலில் இந்த சலுகையை அளித்தது. அதன் பிறகு மேலும் சிலருக்கு மட்டும் அது விரிவு படுத்தப்பட்டது. குறிப்பாக ராணுவ அதிகாரிகளில் பல பிரிவினருக்கு இந்த சலுகை அளிக்கப்படவில்லை. கடந்த 2008 ஆம் வருடத்தில் இருந்து பல முறை கோரிக்கைகள் விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. அதை ஒட்டி ராணுவ அதிகாரிகள் சார்பில் உச்சநீதிமன்ரத்தில் வழக்கு தொடரபப்பட்டது.

இந்த வழக்கில் ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு ஊதிய அலவன்ஸுகள் வழங்கப் படுவதாகவும் அதனால் அவர்களுக்கு இந்த ஊதிய உயர்வு சலுகை அளிக்கப்பட முடியாது எனவும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அத்துடன் அரசுக்கு இதனால் நிதிச்சுமை கூடுவதால் இந்த சலுகைகளை அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. கடந்த 12 ஆம் தேதி இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்துள்ள்து. தீர்ப்பு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் நடந்த பாலகோட் விமானப்படை தாக்குதல், விங் கமாண்டர் அபிநந்தன், மற்றும் சர்ஜிகல் ஸ்டிரைக் என பல ராணுவ நடவடிக்கைகளின் புகைப்படங்களை பாஜக தனது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு அளிக்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்காடி வருவது குறிப்பிடத்தக்கது.