பெங்களூரு: கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 2003ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.  கர்நாடக மாநில அரசு 13,000 ஊழியர்கள் பயன்பெறும் விதமாக பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா,  கடந்த 2023 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை கவனித்தேன். அவர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தேன். அதனை உறுதி செய்யும் விதமாக ஏப்ரல் 1 2004க்கு முன்பு அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு பிறகு பணி ஆணை வழங்கி வேலையில் அமர்த்தபட்டவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 13,000 ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா தகவல்.