70 பியுசி கல்லூரிகளை மூட கர்நாடகா அரசு முடிவு!

Must read

பெங்களூரு:

ர்நாடகாவில் மாணவர்கள் சேர்க்கையின்றி நடைபெற்று வரும் பியுசி கல்லூரிகளை மூட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

அடிப்படை வசதிகள் இல்லாத மற்றும் குறைவான மாணவர்கள் கொண்ட கல்லூரிகளை மூட கர்நாடக கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் 800 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என்றும்  அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் தலைவர், அனில் தத்தாத்ரேயா  அறிவித்துள்ள நிலையில், கர்நாடக அரசு தரமற்ற பியுசி கல்லூரிகளையும் இழுத்து மூட நடவடிக்கை எடுத்து வருகிறது..

பெரும்பாலான பியுசி கல்லூரிகளில், தரமற்ற கல்வி, மாணவர் சேர்க்கை குறைவு, அறிவியல் பரிசோதனை மையம் குறைபாடு என, பல காரணங்களால் அந்த க கல்லுாரிகளை மூட, கல்வித்துறை  முடிவு செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து, அந்த கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் 1357 பேரை மற்ற கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யவும், அதற்கான கவுன்சிலிங் விரைவில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளை மூடுவது தொடர்பான அரசின் அறிவிப்புக்கு  மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

More articles

Latest article