கேரளாவில் நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுதோறும் அத்தப்பூ கோலம் போட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் திருவோணத் திருநாள் கொண்டாடப்பட்டது. பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் கடைசி நாள் அன்று அரிசி மாவினால் கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நடுவே குத்துவிளக்கேற்றி, புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவர்.

இந்த பண்டிகையின்போது கேரள பெண்டிர், திருவதிகாக்கலி என்ற ஒரு வகை நடனம் ஆடுவர். அத்தப்பூ கோலத்தை சுற்றிவந்து ஆடுவர். இந்துக்களின் பண்டிகையான ஓணம் பண்டிகையை கேரளாவில், கன்னியாஸ்திரிகளும் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்களும் அதுபோல இந்த ஆண்டு, கேரள கன்னியாஸ்திரிகள், திருவதிகாக்கலி (ஒரு இந்து குழு நடனம்) நடனம் ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்களின் இந்த நடனம் மத நல்லலிணக்கம், ஒருமைப்பட்டை பேணும் வகையில் இருந்தாக கூறப்படுகிறது.

https://youtu.be/wbXvQ_fXEjM