பெங்களுரூ:
ர்நாடக தேர்தலில் இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கர்நாடகாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும்.

இந்த நிலையில் இன்று காலை சரியாக 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தலில் வாக்களிக்க மக்கள் ஆர்வமுடன் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்களான முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் முதல்வர் ஜெகதிஷ் ஷட்டர் , நடிகர் பிரகாஷ் ராஜ் , காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக் குமார் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். பொதுமக்களும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 44.16% வாக்குகள் பதிவாகியுள்ளன.