டில்லி

பி எஸ் மகனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதால் அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் என அங்கீகரிக்கத் தடை கோரி அக்கட்சி மனு அளித்துள்ளது.

தமிழகத்தில் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தும், அதிமுக மற்றும் பாஜக அணிகள் கூட்டணி அமைத்தும் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.   இதில் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீநிதிரநாத் வெற்றி பெற்றார்.

மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.    இந்நிலையில் ஆளும் கட்சி கூட்டணியாக இருந்து கூட அதிமுகவுக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது.  தற்போது ஓ பி எஸ் மற்றும் இ பி எஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவுவதால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு ஒபிஎஸ் மற்றும் அவர் மகன் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த சி வி சண்முகம் அக்கட்சியின் சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒரு மனு அளித்துள்ளார்.  அந்த மனுவில் அதிமுக மூலம் வெற்றி பெற்ற தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு ஆகவே அவரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் என அங்கீகரிக்க கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் ஒ பி எஸ் மகனுமான ரவீந்திரநாத் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் அந்தஸ்தை இழக்க நேரிடலாம் எனக் கூறப்படுகிறது.