பெங்களூரு

ர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பைக் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்ய ப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக ரோஷன் பைக் பதவி வகித்து வந்தார். இவர் சிவாஜி நகர் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக கர்நாடக காங்கிரஸ் தலைமையிடம் அதிருப்தி மனப்பான்மையில் நடந்துக் கொண்டுள்ளார். குறிப்பாக மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பல ஆட்சேபகரமான கருத்துக்களை கூறி வந்தார்.

ரோஷன் பைக், “கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ் தலைவர் சித்தராமலிங்கையாவின் கொடுங்கோல் தன்மை, மற்றும் தினேஷ் குண்டு ராவின் முதிர்ச்சியில்லா மனப்பானமை ஆகிய இரண்டும் முக்கிய காரணம் ஆகும். இவர்களுக்கு உதவி புரிந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் வேணுகோபால் ஒரு கோமாளி ஆவார்.

நான் இவர்களுடன் பணி புரிவதை சிறிதும் விரும்பவில்லை.   கட்சியின் தற்போதுள்ள நிலைக்காகவும், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததற்காகவும் நான் இஸ்லாமிய மக்களிடம் எனது மனமார்ந்த மன்னிப்பை கோருகிறேன்.” என தெரிவித்தார். இது கட்சிக்குள் கடும் சலசப்பை உண்டாக்கியது.

அத்துடன் தற்போது ஊழல் புகாரில் மாட்டியுள்ள ஐ எம் ஏ ஜுவல்ஸ் நிறுவனத்துக்கும் ரோஷன் பைக் குக்கும் தொடர்பு உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.   இதை ஒட்டி ரோஷன் பைக் உடனடியாக விளக்கமளிக்க கர்நாடகா மாநில காங்கிரஸ் காங்கிரஸ் தலைமை நோட்டிஸ் அனுப்பியது.

ஆனால் அதற்கு அவர் பதில் அளிகவில்லை. அதை ஒட்டி நேற்று  காங்கிரஸ் கட்சியின் மாநிலதலமை ரோஷன் பைக் கட்சிக்கு விரோதமாக நடந்துக் கொள்வதால் அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர் மீது அகில இந்திய காங்கிரஸ் கட்சிநடவடிக்கை எடுக்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.