‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கர்ணன்’ படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் தனுஷ்.
ரஜிஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .இப்படத்தில் தற்போது நடிகை லட்சுமி பிரியா மற்றும் கெளரி கிஷனும் இணைந்துள்ளனர்.
வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
தனுஷ் இன்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டுத் திரையுலகினர் பலரும் அவருக்குத் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.


இந்நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘கர்ணன்’ படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.