பெங்களூரு

ர்நாடகாவில் தேர்தலில் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றும் உத்தரவு அரசு அமைந்த முதல் வாரத்திலேயே அமலாகிறது/

நேற்று கர்நாடகாவின் முதல்வராகப் பதவி ஏற்ற சித்தராமையா தனது அமைச்சரவை சகாக்களுடன் பெங்களூரு தலைமைச் செயலகம் சென்றார்.  துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விதான சவுதாவுக்குள் நுழையும் படிக்கட்டில் தலைகுனிந்து வணங்கினார். பிறகு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தங்கள் அறைகளுக்குச் சென்று கோப்புகளைப் பார்வையிட்ட‌னர்.

முதல்வர் சித்தராமையா தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000, மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதம் 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000, டிப்ளமா ப‌டித்தவர்களுக்கு ரூ.1,500 உதவித் தொகை என காங்கிரஸ் வழங்கிய 5 முக்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதற்கு முந்தைய பாஜக ஆட்சியில் மாநில நிதி நிலைமை சீர்குலைக்கப்பட்டுள்ளது என்றாலும், 5 வாக்குறுதிகளை அமல்படுத்துவதற்கான ஆணை அடுத்த வாரம் நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் வெளியிடப்படும் எனவும் பிறகு 5 திட்டங்களும் நடைமுறைக்கு வரும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .