கான்பூர்:

150 பேரை பலிவாங்கிய கான்பூர் ரயில் கவிழ்ப்பை நிகழ்த்தியவர்கள் ஐ எஸ் தீவிரவாதிகள் என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். மேலும் உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஒரு இடம் கூட கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ,  அம்மாநிலத்திலுள்ள கோண்டா நகரத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாது என்றார். பாஜக நூறுசதவிதம் வெற்றிபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய மோடி, கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி கான்பூரில்  ரயில் விபத்து நிகழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதற்கு சதிவேலைதான் காரணம் என்று கண்டறியப்பட்டிருப்பதாக கூறினார்.  ரயில்விபத்து தொடர்பாக சாம்சுல் ஹோடா என்ற ஐஎஸ் பயங்கரவாதி கைது செய்யப்பட்ட அவன் நேபாளத்தை சேர்ந்தவன் என்றும் அவர்கூறினார்.