ன்றைய இயந்திரத்தனமாக வாழ்க்கையில், நாம் பார்க்கும் அல்லது செய்யும் வேலையின் காரணமாக  நாம் சீக்கிரமே சோர்வைடைகிறோம்.  காரணம் என்ன?

இன்றைய வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் பணிபுரிவோருக்கு சோர்வை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவில் சோர்வினால்  பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதன் காரணமாக இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுபுது வகையான நோய்களும் பரவி வருகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்று, நீர், நிலங்களின் மாசு காரணமாக லட்சக்கணக்கான உயிர் பலிகள் ஏற்படும் நாட்டில், மேலும் ஒரு ஆபத்து இந்தியர்களின் உடல்நிலையை அமைதியாகப் பாதித்து வருகின்றது.

இந்தியாவில்  வேலை பார்க்கும் மக்களின் உடல்நலத்தை சீரழிப்பது எது என்பதை அறியும் நோக்கோடு, மின்டெல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வுக்காக 3,029 இந்தியர்களை  பேட்டி கண்டு ஆராய்ந்தது.  அந்த ஆய்வின் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

இந்தியாவில் 18யில் இருந்து 64 வயதிற்குட்பட்ட இந்தியர்களில் 22 சதவிகிதத்தினர் தங்களின் உடல்நிலை குறித்தான கவலையாக “ சோர்வைத்தான் குறிப்பிடுகின்றனர்.

இது,  ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட வியாதிகளைவிட அதிகமாகும்.  இந்த எண்ணிக்கை பெண்களைப் பொருத்தவரை மிக அதிகமாகக் காணப்படுகின்றது.

இந்தியப் பெண்களில், சோர்வு தான் தங்களின் உடல்நலன் குறித்த முக்கியக் கவலையென 25% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில், வேலை-வாழ்க்கை சமநிலை என்பது பகல்கனவாய் போய்விட்டது.

ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாய் சுமார் 2,195 மணி நேரம் வேலை செய்கின்றனர்.  இது பிற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் அதிகமாகும்.

இந்தியாவில் 1980-1990ல் பிறந்தவர்கள் ஒரு வாரத்திற்கு கொடுமையாய் 52 மணி நேரம் வேலை செய்கின்றனர்.  இது அமெரிக்கா, இங்கிலாந்து, சீனர்கள் உழைக்கும் நேரத்தைவிட மிக அதிகமாகும்.

இந்தியா உலகின் நான்காவது “ குறைந்த விடுமுறை” கொண்ட தேசமாய் விளங்குகின்றது.  நீண்ட கால சோர்வு ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும்.

இது ஒரு பொது சுகாதார பிரச்சனையாக உள்ளது. சோர்வு பல நோய்களின் அறிகுறியாய் இருக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக இரத்த சோகை, மன அழுத்தம், மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பிற நோய்கள் சோர்வை ஏற்படுத்தும்.

எனவே, அனைவரும் சோர்வு ஏற்பட்டால், உடல் நலத்தில்  கவனம் செலுத்துவது அவசியமாகும்.

சோர்வு ஏன் ஏற்படுகின்றது?

உடலுக்குப் புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாகக் கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங்கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும் பொழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன.

இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உலகிற்கு சவாலாகவும், பலவித ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. வேலை பார்க்கும் பெரும்பாலான வர்களுக்கு மன உளைச்சல் மிக அதிகமாக இருக்கின்றது.

மனஉளைச்சல் அதிகமாக இருப்பது பல்வேறு பிரச்சனைகளை வாழ்வில் கொண்டுவந்து சேர்த்துவிடும். உதாரணத்திற்கு, அலுவல் நிமித்த மன உளைச்சல் அடைவோர், விரைவில் சோர்வடைவதால், செக்ஸ் ஆர்வம் குறைந்து போவது மட்டு மின்றி ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் உயிரோட்ட தன்மையும் மிகக்குறைந்து போகிறது.

அதுவே குழந்தையின்மைக்கான காரணமாகிறது. இது கணவன் மனைவிக்கிடையே அன்பை சீர்குலைக்கின்றது. “குழந்தை வேண்டிச் செயற்கை கருவூட்டல் மையத்தில் காத்துக் கிடக்கின்றனர்.

இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது.

அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இதுகுறித்து, பொருளாதார நிபுணர் ஜான் மேனார்ட் கீன்ஸ் என்பவர், இந்தியாவின் வேலை கலாச்சாரம்  இதுபோன்ற பிரச்சினைகளை உருவாக்கி உள்ளது என்பதில்  ஆச்சரியம் இல்லை.

இதன் காரணமாக, ” இந்தியர்களின் எதிர்காலம் அவர்களுக்க நல்ல ஓய்வு நேரத்தை கொண்டு வரும் “ என்பது  தவறு என நிரூபிக்கும் நாடு  இந்தியாதான். என்று கூறி உள்ளார்.