தூத்துக்குடி

றக்கும் படையினர் திமுக வேட்பாளர் கனிமொழியின் காரை சோதனை செய்துள்ளனர்.

ஏழு கட்டங்களாக நடைபெறுm நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிl முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி அண்மையில் நீலகிரி தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவின் காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்திருந்தனர். மேலும் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் காரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

நேற்று தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வழியில் சென்று கொண்டிருந்த தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் காரை மறித்த தேர்தல் பறக்கும் படையினர் காரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனை தூத்துக்குடி மூன்றாவது மைல் என்ற இடத்தில் நடைபெற்றது. கனிமொழியின் காரில் பணம் உள்ளிட்ட பொருட்களை எதுவும் இல்லாததால் தொடர்ந்து செல்ல, பறக்கும் படை அதிகாரிகள் அனுமதி வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.