சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில்  மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, சென்னை அண்ணா அறிவாலயத் தில்  திமுக எம்.பி., கனிமொழி. தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட கட்சியில் இருந்தனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கான  தேர்தல் இன்னும் ஓரிரு வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல்  நெருங்கி வரவதால், தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள திமுக தலைமை, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறத. அதன்படி, திமுகவிர்ன ச் 1 ஆம் தேதி அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவினர் முன்பு அண்ணா அறிவாலயத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நிலையில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி விருப்பமனு தாக்கல் செய்தார். அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்த அவருடன் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவான, அமைச்சர் அனிதா ராதாகிருண்ஷன், தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவான அமைச்சர் கீதாஜீவன் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

ஏற்கனவே  கனிமொழி பெயரில் 50க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், இன்று கனிமொழி விருப்பமனு தாக்கல் செய்தார். முன்னதாக மெரினாவில் உள்ள  அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.