இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் வெளியான, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்ற பெயரில் உருவாகி உள்ளது.

கமல்ஹாசன் உடன் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து .தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியன்-2 பட்டணத்தின் இன்ட்ரோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது, தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலியும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் வெளியிட்டுள்ளனர்.