சென்னை: பிரபல தியேட்டர்களின் உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான  அபிராமி ராமநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அவருடன் தொடர்புடைய சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. மேலும் பிரபல கட்டுமான நிறுவனங்கள் உள்பட பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையின் ஒரு பகுதியாக  அபிராம ராமநாதனுக்கு சொந்தமான  கஸ்தூரி எஸ்டேட்டில உள்ள  அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, ஏராளமான பணம் மற்றும்   கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அபிராமி ராமநாதனை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிவில் வரிமான வரி ஏய்ப்பு செய்துள்ளாரா? என்பது தெரியவரும்.