லகநாயகன் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்த படம் ‘மைக்கேல் மதன காம ராஜன்’. சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கினார். இப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் ஆன பாடலாக அமைந்தது ‘கைவச்சாலும் வைக்காம் போனாலும்’ என்ற பாடல். இந்தப் பாடல் இந்தக் காலத்து இசைக்கு மாற்றி சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது, இளையராஜாவிடமிருந்து உரிமை பெற்று பாடல் டிக்கிலோனா படத்துக்காக மாற்றி அமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.


இப்பாடலின் சிறுபகுதி ‘டிக்கி லோனா’ டிரெய்லரில் காட்டப்பட்டது. இப்படத்தின் டிரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் யூடியூப் தளத்தில் இதுவரை 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது இதற்கு ஒரு சான்று.
கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத் தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ் காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணம், ஷாரா, அருண் அலெக் ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு ஆர்வி. எடிட்டர் ஜோமின். கலை இயக்குனர் ராஜேஷ். சண்டைக் காட்சி தினேஷ் சுப்பராயன். பாடலாசிரியர்கள் அருண்ராஜா காமராஜ் சரவெடி சரண். நடன இயக்குநராக ஷெரீஃப். ஆடை வடிவமைப்பாளர் கீர்த்திவாசன்.