தமயனும் தகப்பனுமாய் ..!: அண்ணனுக்காக உருகிய தம்பி கமல்ஹாசன்

Must read

னது அண்ணன் சந்திரஹாசன் மறைவை ஒட்டி, அஞ்சலி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் – சந்திரஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சந்திர ஹாசன், இன்று லண்டனில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 82. லண்டனில் உள்ள தனது  மகளும்,நடிகையுமான அனுஹாசன் வீட்டில் தங்கியிருந்தார்.

 

அவரது மறைவுக்கு  திரைப் பிரபலங்கள் பலர்,  மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனது அண்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில்  தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்  கமல்ஹாசன்.

அந்தபதிவு:

“நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட கனவுகளில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை.” என தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

More articles

Latest article