கெட்டவார்த்தை வருகிறது: பத்திரிகை டாட் காம் இதழ் மீது இயக்குர் அகத்தியன் பாய்ச்சல்

மது  patrikai.com இதழில் “நெட்டிசன்” என்ற ஒரு பகுதி இருப்பதை வாசகர்கள் அறிவர்.   சமூகவலைதளங்களில் வெளியாகும் பதிவுகளை வெளியிடும் பகுதி இது.

இதில் இன்று, இளையாராஜாவை விமர்சித்து திரைப்பட இயக்குநர் அகத்தியன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை, “இளையராஜாவின் அபஸ்வரம்!: பிரபல இயக்குநர் அகத்தியன் வருத்தம்” என்ற தலைப்பில் பிரசுரித்திருந்தோம்.

அதற்கு அகத்தியன்,  முகநூல் தனிச்செய்தியில் அளித்திருக்கும் பதில்:

“வலைதளத்தில் பதிந்த இக்கருத்தை ஊடகம் ஒன்று பயன்படுத்தி குளிர்காய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்படி என் கருத்துக்களை ஊடகம் பயன்படுத்துவதெனில் நான் பதியும் எல்லாக் கருத்துக்களையும் பதிவிடலாமே. கெட்டவார்த்தை வருகிறது.

எப்போதும் நான் சொல்லும் கவியரசரின் வரிகள்தான் மனதுக்குள் தோன்றுகிறது. வேண்டாம் வருத்தமாக இருக்கும். ஆனால் ஒன்று இவ்வளவு நாளாக என்னைகண்டுகொள்ளாத வியாபாரிகள் இப்போது கண்டுகொள்வது வியப்புதான்.நன்றி இசைஞானி அவர்களுக்கு” என்று குறிபபிட்டிருந்த அகத்தியன், “இதையும் பிரசுரிக்கலாமே!” என்று  தன் விருப்பத்தையும் தெரிவித்திருந்தார்..

அவரது விருப்பப்படி, இதையும் பிரசுரித்துவிட்டோம்.

சிறந்த திரைப்பட இயக்குநர் அவர்களுக்கு நன்றிகள்.


English Summary
agathian condemend patrikai.com