கௌதம் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு’.
பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தின் 2-ம் பாகம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதனிடையே, இந்தப் படத்தில் கமலுக்கு நாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அனுஷ்காவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுவரை ‘வேட்டையாடு விளையாடு 2’ படம் தொடர்பாக கீர்த்தியிடம் யாருமே பேசவில்லை என அவர் தரப்பு மறுத்துள்ளது .