கோவை:

ரசியலை ட்விட்டரில் தொடங்கிவிட்டதாகவும் அரசியலை தொடங்கியது தொடங்கியதுதான் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

கோவை ஈச்சனாரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:

 

“சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு திருடர்களை நாம் அனுமதித்துவிட்டோம். இந்த அரசியலை இப்படியே விட்டுவிடக் கூடாது.. தேவைப்பட்டால் கோட்டை நோக்கி புறப்படுவோம்.

அரசியலில் அமைதியாக இருந்தால் அவமானம், தொடர்ந்து போராடுங்கள், விழித்திருங்கள்” என்று கமல் பேசினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலை தொடங்கியது தொடங்கியதுதான். நான் அரசியலை ட்விட்டரில் தொடங்கிவிட்டேன். அரசியலை ட்விட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர், “கோட்டைக்கு செல்வதை வேறு அர்த்தமாக பார்க்க வேண்டாம். தொழிலாளியுடன் கோரிக்கைகாக செல்வதைப் போன்றதுதான் கோட்டை நோக்கிய பயணம். என்னை ட்விட்டர் நாயகன் என அரசியல் கட்சிகள் விமர்சிப்பதை விமர்சனமாகவே பார்க்கிறேன்” என்றும் கமல் தெரிவித்தார்.