விஷாலுக்கு வில்லியாக மாறிய கமல் மகள்..!

Must read

vishal-and-aksharaபிசாசு படத்தின் இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து விஷால் நடித்து வரும் படம் ‘துப்பறிவாளன்’. விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். ‘பிசாசு, பசங்க – 2’ புகழ் அரோல் கொரேலி இதற்கு இசையமைக்கிறார். இதில் ஹீரோயினாக ‘தடையறத் தாக்க, என்னமோ ஏதோ’ புகழ் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், பிரசன்னா, கே.பாக்யராஜ், வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.
சமீபத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘ஷமிதாப் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமான அக்‌ஷரா ஹாசன் தமிழில் தற்போது தல 57 படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து விஷாலின் துப்பறிவாளன் படத்திலும் கமிட்டாகியுள்ளாராம். இதில் ஒரு நெகட்டிவ் ஷேடான ஒரு கதாபாத்திரத்தில் அக்‌ஷராஹாசன் நடிக்கவிருக்கிறாராம்.

More articles

Latest article