நிலவை இப்படி வர்ணித்தது பட்டுக்கோட்டையார்தான்!
பட்டுக்கோட்டையார் எழுதிய திரைப்பாடல்களில் பொதுவுடமைக் கருத்துக்கள் கொட்டிக்கிடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். காதல் பாடல்களில் கூட, அநாயசமாக பொதுவுடமைக் கருத்துக்களை புகுத்தும் வல்லவராகத் திகழ்ந்தார் அவர்.
“காடு விளைஞ்சென்ன மச்சான்.. நமக்கு கையும் காலும்தானே மிச்சம்” என்பது ஒரு துளி.
அவர் எழுதிய காதல் பாடல்கள் பலவற்றை, வேறு கவிஞர்கள் எழுதியதாக நினைப்பவர்களும் உண்டு.
நிலவை எத்தனையோ கவிஞர்கள், விதவிதமாய் வர்ணித்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் நிலவை, ப்ரியமுள்ள மச்சினியாக (!) வர்ணித்திருப்பார் பட்டுக்கோட்டையார்!
வேறு எந்த கவிஞராவது இப்படி வர்ணித்திருக்கிறார்களா?
இன்று அவரது நினைவுதினம்.
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க? என்று சமுதாயத்தை நோக்கி பட்டுக்கோட்டையார் எழுப்பிய கேள்வி.
pattu
189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
பட்டுக்கோட்டையார்  எழுதிய பொதுவுடைமைச் சித்தாந்த பாடல்வரிகள், மக்களை தட்டி எழுப்பிய கழுத்தாழமிக்க பாடல்கள்…
தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற சொல் வாங்கதே”
சின்னப்பயலே சின்னப் பயலே சேதிகேளடா —————
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி
வசதி படைச்சவன் தரமாட்டான் வயிறு பசிக்கறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுரேன்னு வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்
குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா
காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்
“திருடாதே பாப்பா திருடாதே கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி எடுக்கிற அவசியம் இருக்காது
என்னும் பொதுவுடைமைச் சித்தாந்தங்களை காலத்தால் அழியாத பாடல்களை எளிமையாகப் பாடியவர்.
தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். இவருடைய பாடல்கள் கிராமிய மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டிய பெருமகன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
இன்று அவரது நினைவு நாள்… அவரை போற்றுவோம்…