ஆர்.கே.நகரில் காளிதாஸ் போட்டி: அமமுகவின் 7 பேர் கொண்ட 4ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

Must read

சென்னை : டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் (அமமுக) கட்சியின் 4வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதிர் ஆர்.கே.நகர் தொகுதியில், அமமுக வேட்பாளராக காளிதாஸ் களமிறக்கப்பட்டுள்ளார். விஜபி தொகுதியான இதில், டிடிவி தினகரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேறொருவர் இறக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக தலைமையில் ஒரு அணி தனியாக களமிறங்குகிறது. இதில், அமமுகவுடன் தேமுதிக, எஸ்டிபிஐ, ஓவைசி கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், தேமுதிகவுக்கு 60 தொகுதிகளிலும, எஸ்டிபிஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் உள்பட மற்ற 4 சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும்  ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், அமமுகவின் 4வது கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுஉள்ளது. பட்டியலை  கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி,

  1. ஆர்.கே.நகர்- காளிதாஸ்
  2. அரக்கனோம் – மணிவண்ணன்
  3. ராணிப்பேட்டை- வீரமணி
  4. ஆற்காடு- ஜனார்த்தனன்
  5. கீழ்பென்னாத்தூர் – கார்த்திகேயன்
  6. அம்பாசமுத்திரம் – செ.ராணி ரஞ்சிதம்
  7. நாங்குநேரி- பரமசிவ ஐயப்பன்

ஆகிய 7 பேர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article