சென்னை: தமிழ்நாடு அரசு தகுதிவாய்ந்த பெண்களுக்கு வழங்கும் மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டடத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளமடி, மகளிர் உரிமை தொகை திட்டத்தை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 15ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கியது. அண்ணாவின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் 1.06 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டது, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த திட்டத்துக்கு 1கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாக அறிவிக்கப்பட்டது. சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. அதன்படி இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.