சென்னை:  கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (6ந்தேதி)  சென்னையில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏராளமான விளையாட்டுப் போட்டிகளை நடத்தப்போவதாக தி.மு.க அறிவித்திருக்கிறது. இவ்வாண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறவிருக்கும் போட்டி களில் தொடர் ஓட்டம் முக்கியமான இடத்தை பெறுகிறது.  கலைஞர் சுடர் ஏந்தி, கலைஞர் கோட்டம் வரை தொடர் ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர மாவட்ட வாரியாக மாரத்தான் தொடர் ஓட்டமும் நடத்தப்படுகிறது.

சென்னையில் மாரத்தான் போட்டி  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியனின் முன்னெடுப்பில் நடைபெற உள்ளது. ஏற்கனவே  சென்னையில்  கடந்த 4 ஆண்டுகளாக கலைஞர் நினைவுநாளை யொட்டி  மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில்,  இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டியாக நடைபெற உள்ளது.    இந்த மாரத்தான் போட்டியில்,  தி.மு.கவினர் மட்டுமல்லாது பொதுமக்கள், வெளிநாட்டினர் உள்பட பல தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும்.. இதில் பங்கேற்பதற்கு முன்கூட்டியே பதிவு செய்த கொள்ள வேண்டும். நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் அடுத்த நடவடிக்கையாக சென்னையில்,   ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதியன்று கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கனா பதிவுகள் நடைபெற்ற வருகின்றன. இதற்காக. சென்னை மெரீனா, பெசன்ட் நகர் போன்று மக்கள் கூடும் இடங்களில் முன்பதிவு செய்வதற்கான கவுண்டர்கள் அமைக்கப்பட்டன. இம்முறை நூற்றாண்டு விழா ஸ்பெஷல் என்பதால் இதுவரை சென்னை பார்க்காத அளவிற்கு மக்களின் பங்கேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆண்ட அதிக பேர் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு மாரத்தானில் 73,206 பேர் பங்கேற்க உள்ளனர்.  இது கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற உள்ளது என்று தெரிவித்தார்.