சென்னை: கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் திமுக கூட்டணி கட்சியான  காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு தேர்தல் பணியாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி கட்சியிடம் நேரடியாக கேட்க திராணியில்லாமல், மத்தியஅரசின் உதவியை நாடியிருப்பது, திமுகவின் கையாலாகாதனம்  என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவில் தற்போதுள்ள குறுவை நெற்பயிரைக் காப்பாற்றிடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும் ஏதுவாக காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் மோடிக்கு  முதலமைச்சர்  ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட காவிரியில் இருந்து உரிய நீரை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 41 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு தந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.