ஒரே இரவில் நடக்கும் காதல் த்ரில்லர் ‘க.போ.ஒ.பொ.வே’ படத்தின் சிங்கிள் ரிலீசானது.

முழுக்க முழுக்க காதல் கலந்த காமெடி படம் அசார் – யோகிபாபு – மனிஷா ஜித் நடித்துள்ள “கடல போட ஒரு பொண்ணு வேணும்”

ஆர்.ஜி. மீடியா என்ற பட நிறுவனம் சார்பில் டி.ராபின்சன் பிரமாண்டமாக தயாரிக்க, ஆனந்தராஜன் இயக்கி உள்ளார்.

அசார் – மனிஷா ஜித் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், செந்தில், மன்சூரலிகான், பிக்பாஸ் காஜல், லொள்ளுசபா மனோகர், சுவாமிநாதன், சாய் தீனா, ஜார்ஜ்,தெனாலி, சிவசங்கர் மாஸ்டர், பவுன் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன் ஜே., ஹாரீஸ், இசை – ஜூபின், எடிட்டிங் – சந்துரு, பாடல்கள் – யுகபாரதி, வசனம் – வசீகரன், நடனம் – தீனா, ராதிகா, மக்கள் தொடர்பு – மணவை புவன்.

படம் பற்றி இயக்குனர் ஆனந்த்ராஜன் கூறும்போது, “ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் படம் இது.

வளர்ந்து வரும் இன்றய சூழலில் எல்லோரிடமும் செல் போன் உள்ளது. இது சில நேரங்களில் சிலருடைய வாழ்க்கைக்கு உந்துதலாக அமைகிறது. சிலருடைய வாழ்க்கைக்கு சிக்கலாகவும் அமைகிறது.

தன்னுடைய பரம்பரை சாபத்தை நீக்க போராடும் ஹீரோ அசார். காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தோடு பல பெண்களிடம் காதலை சொல்லியும் தோல்வியே அடைகிறார்.

இறுதியாக ஒரு பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அவர் பதிலை செல்போனில் தெரிவிப்பதாக கூற. சில மணி நேரத்திற்கு பின் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சிக்கல்களை அந்த செல்போன் மூலம் சந்திக்கிறார், நாயகன். இதிலிருந்து அவர் மீண்டாரா, காதல் வெற்றி பெற்றதா என்பதுதான் கதை” என்றார் இயக்குநர்.

இந்த நிலையில், படத்தில் இடம் பெறும், ‘ஏன்டி என்ன பாத்தே’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பாடல் வீடியோ: