டில்லி:

லைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் சுமத்த நடை பெற்ற சதி நடைபெறு வதாக வழக்கறிஞர்  உத்சவ் பெய்ன்ஸ் தொடர்ந்துள்ள வழக்கையடுத்து, இதுகுறித்து உச்சநீதி மன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு விசாரிக்கும்  என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர்  பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக  அனைத்து நீதிபதிகளுக்கும் பிரம்மான பத்திரம் முலம் கடிதம் எழுதியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,   தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார். இந்த போலியான குற்றச்சாட்டு மூலம், நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும், என் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பெண்ணின் பின்னால் பெரிய சக்திகள் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே முக்கியமான வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வரும் தலைமை நீதிபதியை பாலியல் வழக்கில்  சிக்க வைக்க சதி நடப்பதாக உத்சவ் பெய்ன்ஸ் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இதற்காக தன்னிடம் ரூ.ஒன்றரை கோடி வரை பேரம் பேசியதாகவும் தெரிவித்திருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நெருப்போடு விளையாட வேண்டாம் என்று எச்சரித்த நீதிபதிகள், உத்சவ் பெய்ன்சிடம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் சுமத்த முன்வந்தது குறித்து, முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமை யிலான குழு விசாரிக்கும் என அறிவித்து உள்ளது.

இந்த விவகாரத்தில்  ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்தும், இந்த குழு விசாரணை நடத்தும் என்ற நீதிபதிகள், இந்த குழுவுக்கு  சி.பி.ஐ., உளவுத்துறை, டெல்லி போலீசார் ஆகியோர்  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.