2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. .

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிஸ்வநாத் சோமாதர், அண்மையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டிருந்ததால், பதவி ஏற்பதற்காக அவர் 2 ஆயிரம் கி.மீ.தூரம் காரிலேயே பயணித்தார்.

திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட பிஸ்வநாத் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார்.

‘’கொரோனா வழிமுறைகளை கடைப்பிடித்தே பிஸ்வநாத் சாலை மார்க்கமாக காரில்  பயணித்து வந்தார். எனினும்,விதிகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தன்னை 14 நாட்களுக்குத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்’’ என உயர்நீதிமன்ற அலுவலர் தெரிவித்தார்.

இதேபோல், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமாரும், காரில் பயணித்ததால், தன்னை தனிமைப் படுத்தியுள்ளார்.

 சென்னை வந்திருந்த அவர், விமான போக்குவரத்து இல்லாததால்,அங்கிருந்து இருந்து கொச்சிக்கு காரில் செல்ல நேர்ந்தது.

மரபை மதிக்கும் நோக்கில் நீதிபதி மணிக்குமாரும் கொச்சியில் உள்ள வீட்டில் தன்னை , தனிமைப் படுத்திக்கொண்டார்.

14 நாட்களுக்கு பிறகே, அவர் பணிகளைக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்