லாலுவின் டாக்டருக்கு கொரோனா?  வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்..

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார், பீகார் முன்னாள் முதல்- அமைச்சர் ,லாலு பிரசாத் யாதவ்.

உடல் நலக்குறைவால் அவர் இப்போது ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

லாலுவுக்குச் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் , தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

ஏன்?

அந்த டாக்டர் சிகிச்சை அளித்த நோயாளிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் லாலுவுக்கும் தொற்று பரவி இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

’’ எனது தந்தைக்குச் சிகிச்சை கொடுத்த டாக்டருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என அஞ்சுகிறேன்.இதனால் எனது தந்தையின் உடல் நலம் குறித்து கவலையாக உள்ளது.’’ என்று லாலுவின் மகனும், எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தெரிவித்துள்ளார்.

‘’ 72 வயதில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எனது தந்தையை அரசாங்கம் ஏன் விடுதலை செய்யவில்லை?’ என்றும் தேஜஸ்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

– ஏழுமலை வெங்கடேசன்