டெல்லி: வக்ஃபு வாரிய மசோதா குறித்து இறுதி முடிவு எடுக்கும் வகையில்,  நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வஃபு வாரிய மசோதா, எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக நாடாளுமனற் நிலைக்குழுக்கு அனுப்பப்பட்டது.  இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், அதுகுறித்து ஆய்வு செய்துவருகின்றனர். இந்த நிலையில், இன்றும், நாளையும் (ஜனவரி 24, 25) ஆகிய இரு நாட்கள் மீண்டும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி வக்ஃபு மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று அவசரமாக நிலைக்குழு கூட்டப்பட்டு இருப்பது எதிர்க்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உறுப்பினர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய அவசரம் காட்டும் வகையில்,  அவசர கதியில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பல இடங்களில் செயல்பட்டு வரும் இஸ்லாமியர்களுக்கான வக்ஃப் வாரியம், பல பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இடங்களையும், கோயில் நிலங்களையும் தங்களது சொத்து என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதனால் பல இடங்களில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில்,   வஃபு வாரியத்தை கண்காணிக்கும் வகையில்,  மத்திய அரசு வஃபு வாரிய சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது. முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், மத்திய அரசு,  எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே  2024ம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில்,  இம்மசோதாவை மக்களவையில்  அறிமுகம் செய்தது. இதுதொடர்பாக எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பு மற்றும் வலியுறுத்தலால்,  மசோதாவை  நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு  அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை எம்.பி.க்கள், திமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், 2024ம் ஆண்டு அக்டோபர் 14ந்தேதி  நடைபெற்ற கூட்டத்தில் இருந்து திமுக எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி.க்கள் கெளரவ் கோகோய், இம்ரான் மசூத், சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி. அரவிந்த் சாவந்த், மஜ்லிஸ் கட்சியின் அசாதுதீன் ஒவைஸி, சமாஜவாதியின் மொஹிபுல்லா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.

‘நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் செயல்பாடுகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு புறம்பாக உள்ளது. கூட்டுக் குழு முன் ஆஜரான ஒருவா், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சி மூத்த உறுப்பினா்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன் வைக்க அனுமதிக்கப்பட்டாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இதையடுத்து, தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்று, மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது.

இநத் நிலையில், இன்று மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கூடுகிறது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.