இந்தியாவின் 76வது குடியரசு தினவிழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ-வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த அழைப்பை ஏற்று அதிபர் பிரபோவா சுபியாண்டோ நேற்றிரவு டெல்லி வந்தார்.

அவரை வெளியுறவுத்துறை இணை மந்திரி பபித்ரா மார்கிரெட்டா உற்சாகமாக வரவேற்றார்.

டெல்லி வந்துள்ள இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

26ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.