டெல்லி:

வம்பர் 30ந்தேதி ஜார்கன்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் இந்திய தலைமை  தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இன்றே  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

81 தொகுதிகளைக்கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்துக்கு வரும் 30ந்தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23ந்தேதி நடைபெறும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

அதன்படி முதல்கட்ட தேர்தல் நவம்பர் 30ந்தேதி நடைபெறுகிறது.

2வது கட்ட தேர்தல் டிசம்பர் 7ந்தேதி

3வது கட்ட தேர்தல் டிசம்பர் 12ந்தேதி

4வது கட்ட தேர்தல் டிசம்பர் 16ந்தேதி

5வது கட்ட தேர்தல் டிசம்பர் 20ந்தேதி

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் – 23ந்தேதி.