டெல்லி: ஜார்க்கண்டுக்கு 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையாளர் சுஷில் சந்திரா இருவரும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அந்த பேட்டியில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

முதல் கட்ட தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடக்கிறது. 2 மற்றும் 3ம் கட்ட வாக்குப்பதிவுகள் டிசம்பர் 7ம் தேதியும், டிசம்பர் 12ம் தேதியும் நடைபெறும். நான்காம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 16க்கு நடைபெறும். 5 மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 20ம் தேதி நடத்தப்படும்.

மொத்தம் 5 கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, டிசம்பர் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன என்று கூறினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ரகுபர்தாஸ் தமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது