சென்னை
நடிகை ஜான்வி கபூர் பா ரஞ்சித் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்.
நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘தடாக்’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு அவர் ‘ரூஹி’, ‘குட் லக் ஜெர்ரி’, ‘மிலி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட்டில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
கடந்த ஆண்டு வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார். அடுத்து ராம் சரண் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்.
தமிழில் பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் அறிமுகமாக உள்ளார். ‘களவாணி’ திரைப்படத்தின் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகும் இந்த வெப் தொடர் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.