ஜெயமோகன் வசைபாடிய அந்த வங்கிப் பெண் யார்?

Must read

ரசு வங்கி பெண் பணியாளர் ஒருவர் மிக மெதுவாக பணி புரிய.. வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்க… இந்த  வீடியோ காட்சியை தனது வலைப்பூவில் பதிவிட்டார் எழுத்தாளர் ஜெயமோகன். அதோடு, ““நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல.

ஜெயமோகன்
ஜெயமோகன்

இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்.
எனக்கு இரு தேசியவங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிரும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்!” என்று கொட்டித் தீர்த்துவிட்டார் ஜெயமோகன்.
இப்போது ஜெயமோகனை சமூகவலைதளங்களில் பலரும் கண்டித்து வருகிறார்கள்.  பத்திரிகையாளர் ஞாநி, ஜெயமோகனை “வக்கிரம்பிடித்த எழுத்தாளன்” என்று காட்டமாக
ஞாநி பதிவு
ஞாநி பதிவு

வர்ணித்திருக்கிறார். தனது முகநூல் பதிவில், “ஒரு வங்கி பெண் ஊழியரின் வீடியோவைப் போட்டு அநாகரிகமாக அது பற்றி ஒரு ‘எழுத்தாளன்” எழுதியிருப்பதைப பார்த்தேன். வக்கிரமும் வன்மமும்பொய்யும் புனைசுருட்டும் நிரம்பித்ததும்பும் மனதிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும் ? எழுத்தாற்றல் என்ற முகமூடி கிழிந்து போய் ரொம்ப நாளாச்சு.” என்று ஜெயமோகனை தாக்கியிருக்கிறார். ((இருவருக்கும் ஏற்கெனவே சில கருத்து மோதல்கள் உண்டு.)
சிலர், “குறிப்பிட்ட அந்த பெண்மணியை மட்டும் ஜெயமோகன் சொல்லவில்லை. ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் மெத்தனமே அவரை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. ஜெயமோகன் வார்த்தைகள் தடித்திருக்கலாம். ஆனால் அவரது கோபம் நியாயமே” என்றும் எழுதி வருகிறார்கள்.
பிரேமலதா ஷிண்டே
பிரேமலதா ஷிண்டே

சரி, இந்த அளவு விவாதத்தை எழுப்பிய அந்த பெண்மணி யார்? இவரை நன்கு அறிந்த  குந்தன் ஸ்ரீவாத்சவா என்ற சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளதாவது:
பிரேமலதா ஷின்டே என்பது அவர் பெயர். மும்பையில் பணிபுகிறார். கணவரை இழந்த அவருக்கு ஒரே மகன். அவர் வெளிநாட்டில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். எப்போதாவதுதான் இந்தியா வருவார்.
பிரேமலதாவுக்கு  இரண்டு முறை ஹார்ட் அட்டாக்  வந்திருக்கிறது. மேலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்.  ஆகவே  நீண்ட கால விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் பணியில் சேர்ந்தார்.
அவருக்கு இன்னும் விடுப்பு கையிருப்பில் இருந்தது.    அவர் அதை பயன்படுத்தி  அவரது ஓய்வுபெறும் காலம் வரை வீட்டில் இருந்தே சம்பளம். பெற முடியும்
ஆனால், பணி ஆர்வம் காரணமாக, பணிக்குத் திரும்பினார்.  அவர் பணியாற்றிய வங்கிக்கிளை, அவருக்காகவே தனியாக ஒரு கவுண்டரை ஏற்படுத்தியது.
அதன் மூலம் தனது சேவையை தொடர்ந்து வந்தார்.
வரும் பிப்ரவரி 2017ல் ஓய்வு பெறுகிறார் பிரேமலதா.
இப்போது தனது வலைப்பூவில் குறிப்பிட்ட பதிவை ஜெயமோகன் நீக்கிவிட்டார். ஆனாலும் இது குறித்த விவாதங்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து நடக்கின்றன.
அந்த பெண் பணிபுரியும் வீடியோவை இதுவரை  11 மில்லியன்பேர் பார்த்திருக்கின்றனர் அதில் 30,000 பேர் அப்பெண்மணியை  இழிவுபடுத்தி  பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள்.
அந்த பெண் யார், உடல் நலமில்லாதவரா,  பணியில் அசட்டையா… இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். விவாதத்தின் அடிநாதம், ஒரு பெண்மணியை தரம் தாழ்ந்து விமர்சிக்கலாமா என்பதும்,  அரசு ஊழியர்கள் மெத்தனமாய் நடக்கிறார்களா இல்லையா என்பதும்தான். அந்த வகையில் இருவேறு விதமான வாதங்களையும் வரவேற்கலாம்தான்.
அதே நேரம், அடுத்த சர்ச்சை கிடைத்ததும் இதை மறந்துவிடுவார்கள் நெட்டிசன்கள் என்பதும் உண்மை.
பிரமேலதா பணிபுரியும் வீடியோ:
https://www.youtube.com/watch?v=30b5otbZAsE&feature=youtu.be
 
 
 

More articles

Latest article