சென்னை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையத்தை , அரசுடமையாக்கி நினைவில்லமாக ஆக்கப்போவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

 

இதற்கு ஜெயலலிதாவின் வாரிசு என கூறிக்கொள்லும் அவரது அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரது சகோதரர் ஜெ.தீபக், “ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமையாக்கி நினைவில்லமாக்குவது குறித்து என்னைக்கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது. நானும் தீபாவும்தான் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசுகள்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

ஒன்பதாம் தேதியிட்டு எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் பிறகு 16ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது, பலவித யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.