சென்னை

ண்டாள் சர்ச்சையில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த விஜயகாந்தை இன்று ஜூயர்கள் சந்தித்து நன்றி தெரிவிக்க இருக்கிறார்கள்.

ஆழ்வார்கள் குறித்து தினமணி நாளேட்டில் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கட்டுரை சர்ச்சையானது. ஆண்டாளை “தாசி” என வைரமுத்து குறிப்பிட்டதாக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. வைரமுத்துவை பாஜகவின் எச்.ராஜா உள்ளிட்டோர் ஆபாசமாக விமர்சித்தார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மனவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர், வைரமுத்து மன்னிப்பு கேட்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் இரண்டு நாட்களில் உண்ணாவிரத போராட்டத்தை திரும்பப் பெற்றார்.

தற்போது மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் வைரமுத்துவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்தார். மேலும் ஜீயர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து மன்னார்குடி ஜீயர் (செந்தழங்கார செம்பகமண்ணார் ராமானுஜ ஜீயர்) இன்று விஜயகாந்தை சந்தத்து நன்றி தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் வீட்டில் இந்த சந்திப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.