பேருந்துக் கட்டணம் குறைப்பு : தமிழக அரசு அறிவிப்பு

Must read

சென்னை

ற்போது உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.   அதற்கு மாநிலம் எங்கும் எதிர்ப்பு கிளம்பியது.   திமுக,  பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் இந்த கட்டண உயர்வை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின.   இன்று தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நகர மற்றும் மாநகர பேருந்துகளில்  குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ, 4  ஆகவும்அனைத்து நிலைகளுக்குமான  கட்டண உயர்வு ரூ. 1 ஆக குறைக்கபடுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன் படி சாதாரண பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ. 4 ஆகவும், அதிகபட்சம் ரூ. 18 ஆகவும் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.  இதே விகிதத்தில் விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணக் குறைப்பு நாளை (29.01.18) முதல் அமுலுக்கு வருகிறது.

More articles

Latest article