கடந்த 7 ஆண்டுகளாக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது எனப்படும் சைமா விருதுகள் சினிமாவில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 8ஆவது சைமா விருது வழங்கும் விழா கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் கத்தார் நாட்டில் நடந்தது.

கத்தாரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென் இந்திய நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றனர். ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷும், சிறந்த நடிகைக்கான விருதை த்ரிஷாவும் பெற்றனர். மேலும் விமர்சன ரீதியாக சிறந்த நடிகருக்கான விருது ‘அடங்கமறு’ படத்தில் நடித்த ஜெயம் ரவிக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்ததற்காக ⭐ஜெயம் ரவியின் மகன் ஆரவ், சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டார்.