பிக் பாஸ் போட்டியாளர்களான நடிகை ஐஸ்வர்யா தத்தா, ஜூலி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (pubg) .

இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கும் இப்படத்தில், ஐஸ்வர்யா தத்தா, கதாநாயகியாக நடிக்க, இவருடன் ஐந்து கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

பப்ஜி என்ற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் பிரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும், தாதா கதிரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

பப்ஜி போன்ற ஒரு பயங்கர விளையாட்டில் பங்குபெறும் 5 பேர் அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது தான் இந்தப் படத்தின் கதை என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.